Monday, March 16, 2015

மக்காச்சோள வடை

மக்காச்சோள வடை


தேவையான பொருட்கள்:-


  • மக்காச்சோளம் - 1 கப்
  • வெங்காயம்         - 1 கப்
  • பச்சைமிளகாய் - 2
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் - தேவையான அளவு
  • உப்பு                 - தேவையான அளவு
  • கறிவேப்பிலை         - தேவையான அளவு
  • அரிசி மாவு                - தேவையான அளவு
  • மைதா                - தேவையான அளவு
  • எண்ணெய்       - பொறித்து எடுக்கும் அளவுக்கு


செய்முறை:-

மக்காச்சோளத்தை வேகவைக்கமால் உதிர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். (கொரகொரப்பாக) அரைத்த மக்காச்சோளத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி,பூண்டு பேஸ்ட், உப்பு, கறிவேப்பிலை, அரிசிமாவு, மைதா இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு பிசைந்துக்கொள்ளவும். வாணலில் பொறித்து எடுக்க தேவையான எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வடையை தட்டி போடவும். வுடை பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும். சுவையான மக்காச்சோள் வடை தயார். 

மேலும்  படிக்க :-

No comments:

Post a Comment