Monday, March 16, 2015

ஐதராபாத் கத்திரிக்காய் மசாலா

ஐதராபாத்  கத்திரிக்காய் மசாலா


தேவையான பொருட்கள்:


  • கத்தரிக்காய் - கால் கிலோ
  • கடுகு                  - கால் டீஸ்பூன்
  • சீரகம்                  - கால் டீஸ்பூன்
  • பச்சைமிளகாய் - 2
  • கறிவேப்பிலை - தேவையான அளவு
  • எண்ணெய்           - தேவையான அளவு


அரைக்க தேவையான பொருட்கள்:-

  • வெங்காயம் - 3
  • வேர்க்கடலை - 25 கிராம்
  • எள்                      - 25 கிராம்
  • பட்டை              - 1
  • ஏலக்காய் - 3
  • கிராம்                 - 3
  • தேங்காய் - 2 பத்தை
  • மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு                    - தேவையான அளவு
  • இஞ்சி, பூண்டு - பேஸ்ட் தேவையான அளவு
  • புளி கரைசல் - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • தனியா தூள் - 1 டீஸ்பூன்


செய்முறை:-

கத்தரிக்காயை நான்காக பிளந்து (முழுக்காய்யாக இருக்க வேண்டும்) கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும். பின்பு அரைத்த மசாலாவை பிளந்த கத்தரிக்காயில் வைக்கவும். பின்பு எண்ணெய்யை ஊற்றி (தராளமாக இருக்க வேண்டும்) எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரிந்தவுடன். மசாலா கத்தரிக்காயை போட்டு வதக்க வேண்டும் பின்பு மிதமான மசாலாவை போட்டு வதக்கிக் கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு எண்ணெய் பிரிந்து கிரேவி போல்  வரும் வரை கொதிக்கவிட வேண்டும். சுவையான ஐதராபாத் கத்தரிக்காய மசாலா ரெடி. சாதாம் மற்றும் சப்பாத்தி இவைகளுக்கு தொட்டுக்கொள்ளலாம்.

வாசிப்பு தொடர்ந்து:-

கத்திரிக்காயின் மருத்துவ குணங்கள்
அஜீரணக்கோளாறு போக்க அடுப்பன்கறை பொருட்கள்
உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படும் அத்திப்பழம்
இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் கோவாக்காய்
பித்தப்பையில் கற்களா அதை கரைக்க பீன்ஸ்
உடலை வலுவாக்கும் மூங்கில் நெல்
இளமைமைத் துடிப்புடன் வாழ ஒரிதழ் தாமரை
பல வகைகள் கொண்ட வாழைப்பழத்தில் உள்ள மருத்துவப் பயன்
சுண்ணாம்பு மருத்துவம்

No comments:

Post a Comment