Saturday, December 27, 2014

இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்த சோளம்

இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்த சோளம்



இந்தியாவில் சோளம், அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளம் நவதானிய வகைகளும் ஒன்று. தென்னாட்டிற்கே உரிய சிறு தானிய வகையைச் சார்ந்தது. 


நகரமயமாக்கல் சூழலில் மேற்கத்தி கலாச்சார போக்கை கடைபிடிக்கும் நம் மக்கள் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உண்பதை அறியாமல் உள்ளனர். பண்டைய உணவுப் பொருட்களுக்கு ஏங்கி தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. சமீப காலமாக சிறு தானியவகைகளான கம்பு, ராகி, சோளம் போன்றவற்றை பயன்படுத்துவது நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. 

சிறு தானியங்களில் பல இருந்தாலும் சோளம் முதன்மையான உணவுப் பொருளாக கருதப்படுகிறது. சோள உற்பத்தியில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.

சோளம் ஒரு அருமையான உணவுப் பொருள், பார்லி அரிசிக்கு நிகரான சத்துக்கள் இதில் உள்ளன. கோதுமையில் உள்ள புரதச் சத்துக்கள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.

  1. சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால் உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்தை உண்டு.
  2. கண் குறைபாடுகளை சீர் செய்யும் பீட்டா கரோட்டின் இதில் அதிகமாக உள்ளது
  3. அனைத்து வயதினரும் உண்பதற்கு ஏற்ற சோளம், சுலபமாகவும் செரிக்கக் கூடியதுமாகும்.
  4. சோளத்தில் அதிக அளவு மாவுச்சத்தும், நார்ச்சத்தும் அடங்கியுள்ளதால் இது ஒரு சக்தி தரும் உணவாக திகழ்கிறது.
  5. கோதுமை ஓவ்வாமை உள்ளவர்களும் சோளத்தை உண்ணலாம். ஏனெனில் கோதுமையில் உள்ள குலுட்டான் எனும் வேதிப் பொருள் சோளத்தில் இல்லை.
  6. கோதுமையில் உள்ள புரோட்டீனை விட சோளத்தில் உள்ள புரோட்டீன் சிறப்பு வாய்ந்தது.


100 கிராம் சோளத்தில் காணப்படும் ஊட்டப் பொருள்கள்:-

  • ஆற்றல் - 349 
  • புரதச்சத்து         - 10.4 கிராம்
  • கொழுப்புச்சத்து - 1.9 கிராம்
  • மாவுச்சத்து - 72.6 கிராம்
  • கால்சியம்         - 25 மி.கி
  • இரும்புச் சத்து - 4.1 மி.கி
  • பீட்டா கரோட்டீன் - 47 மி.கி
  • தயமின - 0.37 மி.கி
  • ரிபோஃபிளேவின் - 0.13 மி.கி
  • நயசின்         - 3.1 மி.கி


ஆன்டி – ஆக்ஸிடன்ட்டிற்கு சோளம்:-

சோளத்திலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணம் உடலுக்கு நல்ல பலத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியதாகும். சோளத்தினுடைய ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணம் அதனுள் இருக்கும் ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸீடன் தொடர்பு உடையது.

நார்ச்சத்து:

சோளத்தில் அதிகளவு நார்சத்து உள்ளது. ஆராய்ச்சிகள் மூலம சோளத்தில் உளள நார்ச்சத்து ஆக உடலில் மாற்றப்படுகிறது. என்று கண்டறியப்பட்டுள்ளது. இவை பாக்டீரியாக்களை வளரச் செய்கிறது. இது போல் குடலுக்கு சத்தை கொடுத்து குடல் புற்றுநோயை தடுக்கக்கூடிய சக்தி வாய்ந்தது சோளமாகும்.

இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சமன்படுத்த:-

“B” Complex  மற்றும் நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமப்படுத்தக் கூடியது. சோளத்தில் உள்ள சத்துக்கள் உடல் செரிமான சக்தியை அதிகளவு இல்லாமலும் குறைந்த அளவு இல்லாமலும் பார்த்துக் கொள்கிறது. இதனால் இரத்தத்தில் உறிஞ்சப்படும் சர்க்கரையின் அளவு சம நிலையில் உள்ளதால் கண்டறியப்பட்டுள்ளது. இன்சுலின் சாரா சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாகும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு:

கர்ப்பிணிகளுக்கு தேவையான ஃபோலிக் அமிலத்தை மக்காசோளம் கொடுக்கிறது. மக்காசோளத்தில் உள்ள ஃபோலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு இல்லாமல் போனால் குழந்தையின் எடை குறையும் மற்றும் மூளை வளர்ச்சியும் குறையும்.

கண் பார்வை மற்றும் தோலுக்கு:

நல்ல கண் பார்வை மற்றும் தோலுக்கு மக்காசோளம் சிறந்தது.

கொலஸ்டிராலை கட்டுப்படுத்த:-

மக்காசோளம் இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை குறைக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. கொலஸ்டிரால் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கக் கூடியது

No comments:

Post a Comment