Saturday, December 27, 2014

சிறுநீர்கக் கல் கரைய வாழைத்தண்டு சூப்

சிறுநீர்கக் கல் கரைய வாழைத்தண்டு சூப்


வாழை மரம் மனிதனை ஆரோக்கியமாக வாழவைக்கும் மரமாகும். வாழையின் அனைத்து பாகங்களுமே மருத்துவப் பயன்  கொண்டவை. அதில் வாழைத்தண்டு உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரக்கூடியது.

வாழைத்தண்டை பொரியலாகவும், கூட்டும் செய்து சாப்பிடுவதை விட சூப் செய்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. அந்த சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானப் பொருள் :-

  • வாழைத்தண்டு பொடியாக நறுக்கிய   - 1 கப்
  • தக்காளி                         - பாதி
  • மிளகாய் வற்றல்                 - ஒன்று
  • மஞ்சள் தூள்                 - சிறிது
  • சீரகம்                         - 1 ஸ்பூன்
  • மிளகு                         - 5
  • சின்ன வெங்காயம்                 - 5
  • இஞ்சி                         - 1 துண்டு
  • பூண்டு பல்                         - 2
  • கொத்தமல்ல, கறிவேப்பலை - தேவையான அளவு
  • தனியா                         - 1 மேசைக்கரண்டி
  • உப்பு                         - தேவைக்கு
  • எண்ணெய்                        - 2 தேக்கரண்டி

செய்முறை:-

  1. வாழைத்தண்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி 6 கப் நீர் விட்டு சிறுதீயில் கொதிக்க விடவும்
  2. தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.
  3. வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
  4. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
  5. வாழைத்தண்டு பாதி வெந்திருக்கும் போது வதக்கிய கலவையையும், பொடி செய்த தூள், மஞ்சள், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.
  6. கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சிறிது தூவி இறக்கவும். சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.  உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ, குறைக்கவோ செய்யலாம். இல்லை எனில் மிளகு தூள் சூப் சாப்பிடும்போது கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.

வாழைத்தண்டு சூப் சாப்பிடுவதால் ஏற்படுத் நன்மைகள்:-

  • உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியேறும்.
  • இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற வேதிப்பொருட்களை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
  • சிறுநீரகத்தில் உண்டாகும் கல் அடைப்புகளை நீக்கி சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்.
  • கொழுப்பையும், உடலில் உள்ள தேவையற்ற ஊளைச் சதையையும் குறைக்கும். தொப்பையை குறைக்கும்.
  • கல்லீரலைப் பலப்படுத்தும்.
  • இரத்தத்தின் கடினத் தன்மையைக் குறைக்கும்.
  • இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்பைக் கரைத்து இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.
  • நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.
  • கண் பார்வையைத் தெளிவாக்கும்.
  • அஜீரண கோளாறைப் போக்கும்.
  • சருமத்தைப் பாதுகாக்கும்.
  • உடல் பருமனைக் குறைக்கும்.
வாரம் இருமுறை வாழைத்தண்டு சூப் அருந்தி வந்தால் உடல் நலத்திற்கு நல்லது.


No comments:

Post a Comment