Saturday, November 23, 2013

கீரை மருத்துவம் - தாய் பால் அதிகம் சுரக்கும் பருப்பக் கீரை


செடி வகையைச் சேர்ந்தது அக்கீரை ஒரு காம்பில் இரண்டே இலைகள் காணப்படும். பச்சையும் சாம்பல் நிறமும் கலந்தது.

Portulaca Oleracea

பருப்புக் கீரை ரத்தத்தைச் சுத்தமாக்கி உடலில் இருக்கும் நாள்பட்ட பல நோய்களைத் தீர்க்கக் கூடியது. நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற பாதிப்புகளைப் போக்கும்.வெட்டைச்சூடு, பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். தாய்ப்பால் இல்லாத பெண்கள், பருப்பு கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.


சித்தர் பாடல்:

பிள்ளைப் பருப்பிலைக்குப் பித்தமறுங் - கொள்ளத் 
தெரியுங் கடல்சூழ்இத் தேசத்தோ ருக்குக்
கரிய குரலனங்கே காண்         - அகத்தியர் குணபாடம்

பருப்புக் கீரையின் மருத்துவப் பயன்கள்:

  • பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் கலந்து அரைத்து அக்கி மற்றும் படை, தேமல் போன்ற தோல் நோய்கள் மீது பூசினால் நிவாரணம் பெறலாம்.
  • பருப்புக் கீரை சாறைத் தினமும் 60 மி.லி அளவில் காலை மாலை இருவேளையும் சாப்பிட்டால் நீர்ச் சுருக்கு, நீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
  • பருப்புக் கீரையுடன் ஊறவைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துக் கொடுத்தால் சீதபேதி, ரத்த பேதி இரண்டும் உடனே நிற்கும்.
  • பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி நீங்கும்.
  • பருப்புக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சமஅளவு எடுத்து, சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
  • பருப்புக் கீரையுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து தொடர்ந்து 48 நாள்கள் சாப்பிட்டால குடிப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து மீளலாம்.
  • பருப்புக் கீரை, உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பின்னால் கை, கால் எரிச்சல் குணமாகும்.
  • பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கொழுப்ப கரையும்.
  • பருப்புக் கீரையுடன், குடைமிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும். முகப்பொலிவும் கூடும்.

100 கிராம் பருப்புக் கீரையில் உள்ள சத்துகள்:

நீர்ச்சத்து - 90.5 கிராம
புரதம் - 2.4 கிராம்
கொழுப்பு - 0.6 கிராம்
தாது உப்புகள் - 2.3 கிராம்
நார்ச்சத்து - 1.3 கிராம்
சர்க்கரைச்சத்து - 2.9 கிராம்
சுண்ணாம்புச்சத்து - 111 மி.கி
புhஸ்பரஸ் - 45 மி.கி
இரும்பு - 45 மி.கி
மாவுப்பொருள் - 2292 மி.கி
தையாமின் - 0.10 மி.கி
ரிபோ.பிளேவின் - 0.22 மி.கி
நியாசின் - 0.7 மி.கி
வைட்டமின் - சி - 29 மி;.கி
கலோரித்திறன் - 27 கலோரி

குறிப்பு: அதிக குளிர்ச்சியான தேகம் கொண்டவர்கள், இக்கீரையைத் தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment