Saturday, November 23, 2013

கீரை மருத்துவம் - கால்சியம் குறைபாட்டால் உண்டாகும் நோய்களுக்கு பசலைக் கீரை


கிராமங்களில் பெரும்பாலும் இக்கீரையை காணலாம். வேலிகளில் பந்தலில் கொடியாகப் படர்ந்து பார்க்க அழகாய் இருக்கும். 

பசலையில் இருவகை உண்டு:-

1.கொடிப்பசலை 
2.தரைப்பசலை
தரைப்பசலை  (Portulaca quadrifida)

கொடிப் பசலையில் இருவகைகள் உண்டு. ஒன்று சிவப்பு வகை மற்றொன்று வெள்ளைப் பசலை வெள்ளைப் பசலை வெண்ணிறம் கிடையாது. பச்சை நிறம் உடையது. இலை பெரியதாக இருக்கும் இது கொடியாகப் படரும் சிறு வெற்றிலை அளவில் தடிமனாகக் காணப்படும்.
துரைப்பசலை தரையில் படரும் இளஞ்சிவப்பாகவும் பச்சை நிறத்திரும் காணப்படும் இதன் இலை சிறியதாக இருக்கும். 


ஏவ்வகைப் பசலையாய் இருப்பினும் - எல்லாவற்றின் மருத்துவ குணமும் ஒன்றே குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. சுத்து நிறைந்த கீரை. இதில் ஏ> பி>சி வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. இரும்பு புரதம் சுண்ணாம்பு ஆகிய சத்துக்களும் உள்ளன.

உணவில் பசலைக் கீரையை அதிகமாகச் சேர்த்துக கொண்டால் கால்சியம குறைபாட்டால் உண்டாகும் அனைத்துவிதமான நோய்களும் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையைப் போக்கும் சிறந்த நிவாரணி இது. பசியைத் தூண்டி. உடலைத் தேற்றுவதில பசலைக் கீரைக்கு நிகர் வேறு எதுவும் இல்லை. 

 சித்தர் பாடல்:

நீர்க்கடுப்பு நீரடைப்பு நீங்காத மேகமுமிவ்
வூர்க்கடுத்து வாராமல் கட்டுங்கான் - பார்க்கவொண்ணா
அற்பவிடை மாதே! அரோசிசர்த்தி யைத் தொலைக்கும்
நற்பசாரைக் கீரையது நன்று.           – பதார்த்த குணசிந்தாமணி

நீர்க்கடுப்பு:

பசலைக் கீரைச் சாற்றில் பார்லி சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து ஊறவைத்து உலர்த்திப் பொடி செய்து அதைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் நீர் எரிச்சல். நீர்க்கடுப்ப போன்றவை குணமாகும்.

இந்திரீய ஒழுகல்:

பசலைக் கீரைச் சாறு. யானை நெருஞ்சில் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து 2 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து தினமும் காலை மாலை இருவேளையும் சுமார் 60 மி.லி அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்க ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும். ஆண்களுக்க உண்டாகும் இந்திரீய ஒழுக்கும் குணமாகும்.

gpத்தம் தணிய:

பசலைக் கீரைச் சாறில் நெல்லிக்காய் வற்றல் சோம்பு இரண்டையும் சம அளவில் ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் அதிகாலையில் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும். gpத்தம் தணியும்.

வாந்தி நிற்க:

பசலைக் கீரைச் சாறில் மயில் இறகின் சுட்ட சாம்பலைக் குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாந்தி விக்கல் போன்றவை குணமாகும்.

இளைத்த உடல் பெருக:

பசலைக் கீரைச் சாறில் கறுப்பு உளுந்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி கஞ்சி காய்ச்சிக் குடித்தால் உடல் வலிமை பெறும். இளைத்த உடலும் பெருகும்.

பால்வினை நோய்:

பசலைக் கீரை வேப்பிலை வெள்ளை எருக்கு ஆடுதீண்டாப்பானை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் ஆண்குறியில் உள்ள புண் சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்கள் முழுமையாகக் குணமாகும்.

தைராய்டு நோய்:

பசலைச் கீரைச் சாறு (100 மி.லி) மற்றும் இஞ்சிச் சாறில் (100 மி.லி) 100கிராம் கொள்ளை ஊறவைத்து பிறகு காயவைத்து பொடியாக்கிக்கொள்ளவும் இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.

கொழுப்G கரைய:

பசலைக் கீரையுடன் பூண்டு மிளகு மிளகாய் வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்G கரையும்.


சிறுநீரகக் கற்கள் கரைய:

பசரைக் கீரைச் சாற்றில் சிறுநெருஞ்சிமுள்ளை ஊறவைத்து உலர்த்தி பிறகு பசும்பாலுடன் சேர்த்து வேகவைத்து உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் என 20 நாள்களுக்குச் சாப்பிட்டால் சிறுநீரக்க கற்கள் கரையும். சிறுநீரகம் தொடர்பான பிற நோய்களும் குணமாகும்.

உடல் எடை குறைய:

பசலைக் கீரைச் சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
கொடிப்பசலை (Portulaca quadrifida)


100 கிராம் பசலைக் கீரையில் உள்ள சத்துகள்:

நீர்ச்சத்து - 92.1 கிராம்
புரதம் - 2.0 கிராம்
கொழுப்பு - 0.8 கிராம்
தாது உப்புகள் - 1.7 கிராம்
நார்ச்சத்து - 0.6 கிராம்
சர்க்கரைச்சத்து - 2.9 கிராம்
சுண்ணாம்புச்சத்து - 73 மி.கி
புhஸ்பரஸ் - 21 மி.கி
இரும்பு - 10.9 மி.கி
மாவுப்பொருள் - 5580 யு.ஜி
தையாமின் - 0.03 மி.கி
ரிபோஃபிளேவின் - 0.26 மி.கி
நியாசின் - 0.5 மி.கி
வைட்டமின் - சி - 28 மி.கி
கலோரித்திறன் - 27 கலோரி


குறிப்பு: கொடிப்பசலை அதிகமாக சளியை உண்டாக்கும் என்பார்கள். எனவே. இக்கீரையை சமைக்கும்போது மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது.

No comments:

Post a Comment