Tuesday, May 5, 2015

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்


சுரைக்காய் என்பது கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம்.சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது.இது சீதளத்தை உண்டாக்கக் கூடியது. உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கென இதை உபயோகப்படுத்தலாம். இது சிறு நீரைப் பெருக்கக் கூடிய சிறந்த உணவுப் பொருள். இதை உணவாகக் கொள்ளும்போது உடலில் நீரேற்றத்தால் வந்த வீக்கத்தை கரைக்க வல்லது. 


*  சுரைக்காய் தன்னுள் 96 சதவீதம் நீர்ச்சத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் இதனுடைய சாறு எடுப்பது மிகவும் எளிதாகின்றது. சுரைக்காய்ச் சாறு விட்டமின் ‘சி’, விட்டமின் ‘பி’, விட்டமின் ‘சி’, “சோடியம்“, “இரும்பு”, “பொட்டாசியம்” ஆகிய சத்துக்களைப் பெற்றுள்ளதால் புத்துணர்வு தரக் கூடிய, சோர்வைப் போக்கக் கூடிய உணவாகப் பயன்படுகின்றது. 

* ஒரு கப் சுரைக்காய்ச் சாற்றில் 1.8 மி.கி. துத்தநாகச்சத்து இருப்பதால் அது செல்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும், உட்சுரப்பிகள் ஒழுக்காகச் சுரப்பதற்கும் உறுதுணையாகின்றது. 

* உடல் பருமன் ஆனவர்கள் சுரைக்காய் சாறு ஒரு கப் அளவு எடுத்து அன்றாடம் காலையில் குடிப்பதால் உடல் எடை குறைந்து அழகான மெலிந்த தேகத்தைப் பெறுவர். 

* பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின்கள் ஆகியன செறிந்த சுரைக்காய்ச் சாறு ஒரு ஊட்டசத்து மிகுந்த உணவு மட்டுமின்றி பசியை அடக்கித் தேவையின்றி உணவு உண்பதைத் தவிர்த்து உடலை மெலியச் செய்கிறது. 

* சுரைக்காய் தன்னுள் கரையக் கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களை அபர்மிதமாகப் பெற்றுள்ளது. இது உணவாகும் போது சீரண உறுப்புகளுக்கு பலம் தந்து அவற்றை செம்மைப் படுத்தி மலச்சிக்கலை மறையச் செய்கின்றது. மலச்சிக்கல் இல்லாதபோது இயற்கையாகவே வயிற்றில் அமிலம் சேர்ந்து புண் ஆகுதல். வயிற்றில் காற்று சேர்ந்து வயிற்றை அடைத்தது போல் தோன்றுதல் ஆகிய பிரச்சினைகள் இல்லாமல் போகும். மலச்சிக்கல் இல்லாத போது ஆசனவாய்ப் புற்று அறவே தடுத்து நிறுத்தப்படுகிறது. 

* சுரைக்காய்ச் சாறு தர்ப்பூசணி சாறு போல கோடைக்கால வெயிலினால் வரும் உஷ்ணத்தைத் தவிர்க்க உதவுகிறது. சுரைக்காயில் 95 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் இது தாகத்தைத் தணிப்பதோடு உடலிலிருந்து வெளிப்பட்டு வியர்வையாய் சென்ற நீர்ச்சத்துக் குறையை ஈடுகட்டுவதாகவும் உள்ளது. 

* சுரைக்காய் சிறுநீற்றைப் பெருக்க வல்லது. சுரைக்காய் சாறு உடலில் தேங்கிய நீரை வெளித்தள்ளி வீக்கத்தையும் கரைக்க உதவுகிறது. சிறுநீரகத்துக்கும் துணையாய் நிற்கிறது. 

* சுரைக்காய் லேசான உறக்கத்தை வருவிப்பதாகவும் அமைகிறது. இதனால் தூக்கமின்மை, தலைவலி ஆகியன தவிர்க்கப் படுகின்றன. 

* அதிகமான வியர்வை, சோர்வு, மயக்கம், பேதி என ஏதேனும் ஓர் துன்பம் உற்ற போது ஒருகப் சுரைக்காய்ச் சாறு உடனடித் தீர்வாக உதவுகிறது. இழந்த நீர்ச்சத்தை சமன்படுத்துகிறது. 

* சுரைக்காய் சாறு பருகுவதால் ஈரல் வீக்கத்தை தவிர்க்கலாம் என்று ஆயுர்வேத நூல்கள் அறிவுறுத்துகின்றன. 

No comments:

Post a Comment