Monday, December 22, 2014

பித்தப்பையில் கற்களா அதை கரைக்க பீன்ஸ்

பித்தப்பையில் கற்களா அதை கரைக்க பீன்ஸ்


மனித உடலானது திறம்பட செயல்பட அனைத்து சத்துக்களும் தேவை. இந்த சத்தானது நாம் உண்ணக்கூடிய உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேருகிறது. இதில் ஏதேனும் ஒரு சத்துப் பொருள் குறையும் போது தான் நம் உடலை நோய தாக்க ஆரம்பிக்கும். அப்படி ஏற்படும் பற்றாக் குறையினை ஈடுகட்ட மருந்து மாத்திரைகளை உட்கொள்வதை விட, நோய் வரும் முன் காத்தலே சிறந்தது.


மனித உடலுக்கு தேவையான சத்துக்களானது கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களில் காணப்படுகிறது. இதில் நாம் அதிகம் பயன்படுத்துவது காய்கறிகளையே ஏனெனில் அனைத்து சத்துப் பொருட்களும் ஒருங்கிணைந்து காணப்படுவது இந்த காய்கறிகளில் மட்டுமே. அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றானதும் சைவ உணவுப் பிரியர்கள் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடியதுமான பீன்ஸின் மகத்துவத்தைப் பற்றி காண்போம்.

100 கிராம் பீன்ஸில் அடங்கியுள்ள சத்துப் பொருட்கள்:

வைட்டமின் ஏ - 23%
வைட்டமின் பி - 27%
வைட்டமின கே - 12%
மாவுச்சத்து - 7.13 கி
நார்ச்சத்து - 3.4 கி
புரதச்சத்து - 1.83 கி
பொட்டாசியம் - 209 மி.கி
பாஸ்பரஸ் - 38 மி.கி
கால்சியம் - 35 மி;.கி
மக்னீசியம் - 24 மி;கி
சோடியம் - 6 மி.கி
இரும்புச்சத்து - 1.04 மி.கி
நியாசின் - 0.104 மி;.கி
மாங்கனீசு - 0.101 மி.கி
ரிபோ ஃபிளேவின் - 0.906 மி;கி
ஜிங்க்         - 0.24 மி.கி
தயாமின் - 0.075 மி.கி
கரோட்டின் - 379 µg  (மியூ கிராம்)
லூட்டின் - சியா சாந்தின்
(ணுநய ஓயவொin) - 640 µg

பீன்ஸை குழம்பிலிட்டு சாப்பிடுவதை விட பொரியல் செய்து சாப்பிடுவதே சிறந்தது. ஏனெனில் வேக வைத்த காய்கறிகளைத் தான் மனித குடல் எளிதில் ஜீரணிக்கும் அதன் சத்துக்கள் முழுமையான உடலுக்கு கிடைக்கும்.


  • பீன்ஸில் நிறைந்து காணப்படும் லூட்டின், சியாசாந்தின், தயாமின் போன்ற சத்துக்கள் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
  • இதில் காணப்படும் வைட்டமின் “ஏ” சத்து கண் பார்வை நரம்புகளை திறம்பட செயல்புரியச் செய்து பார்வையை தெளிவாக்குகிறது.
  • பீன்ஸில் காணப்படும் லூட்டின், பிபோபிளேவின் போன்ற வேதிப்பொருட்கள், சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் நம் உடலையும், தோலையும் தாக்காத வண்ணம் பாதுகாக்கும்.
  • நம் உடலுக்கு வலுவைக் கொடுக்கும் ஈசோபிளேவோன்ஸ் எனப்படும் தாதுப் பொருள் இதில் அதிகம் உள்ளது.
  • மூல நோயினால் அவதிப்படுபவர்கள் பீன்ஸை உணவில் பயன்படுத்தி வர நோயின் தாக்கம் குறையும்.
  • பல்வலி, தொண்டை புண், நாவறட்சி, வறட்டு இருமல் போன்றவற்றை நீக்கும் ஆற்றல் பீன்ஸிற்கு உண்டு.
  • கை,கால் நடுக்கம் உள்ளவர்கள் பீன்ஸை உணவில் அடிக்கடி பயன்படுத்திவர நல்ல பலன் கிடைக்கும்.
  • இதை பொரியல் செய்து சாப்பிட்டு வர செரிமான சக்தியை அதிகரித்து, வாயுத் தொல்லையை நீக்கும். உண்ணும் உணவு விரைவில் ஜுரணமடையும்.
  • இதில் காணப்படும் நார்ச்சத்து, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாகச் செயல்பட்டு மலத்தை இளக்கி வெளியேற்றும்.
  • இது பித்தப்பையில் கற்கள் உண்டாக்காமல் தடுக்கும். மேலும் கற்கள் உண்டானால் அதை கரைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
  • தசை வலி, மூட்டு வலி, எலும்புகளில் வலி உணடாவதைத் தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
  • நம் உடலுக்கு தினமும் தேவைப்படும் 10.5% இரும்புச் சத்து 100 கிராம் பீன்ஸில் காணப்படுகிறது. இது நம் உடலில் இரும்புச் சத்து இழப்பை ஈடுசெய்து இரத்த சோகை நோயிலிருந்து உடலை பாதுகாக்கும்.
  • பீன்ஸில் குணம் குளிர்ச்சி, இது சிறுநீரை பெருக்கி வெளியேற்றும் மேலும் சிறுநீர் சம்பந்தமான நோயகளிலிருந்து உடலை பாதுகாக்கும்.
  • நரம்பு தளர்ச்சி, நரம்பு சம்பந்தமான நோய்களை நீக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
  • பீன்ஸை சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய நீரில் முகம் கழுவி வர முகம் பளபளப்பாகும்.



பீன்ஸை பொரியல் செய்தோ, பிற காய்கறிகளுடன் சேர்த்து சூப் செய்தோ அல்லது சாம்பாரிலிட்டோ சாப்பிட்டு வர நமக்கு கிடைக்கும் பயன்களோ பல. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.


கொழுப்பு குறைய:

இரத்தத்தில் கொழுப்பின் அளவு மிகுந்த காணப்படுபவர்கள் பீன்ஸ் பொரியலை தினமும் உணவில் சேர்த்து வர இதில் காணப்படும் லெசித்தின் எனும் நார்பொருள் இருதய டானிக்காக செயல்படுவதோடு இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து சுத்தமாக்கும். மேலும், இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கி, இருதய அடைப்பு மற்றும் இருதய சம்பந்தமான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.

வயிற்றுப் புண் நீங்க:

வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்களினால் அவதிப்படுபவர்கள் பீன்ஸை சிறிதாக நறுக்கி சிறிதளவு உப்பு மற்றும் தேவைக்கேற்ப நீர் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றுப் புண் மற்றும் குடல்புண்கள் விரைவில் ஆறும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு:

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் அடிக்கடி பீன்ஸை பயன்படுத்த வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். இதனால் இந்நோயின் தாக்கம் குறையும். உடல் எடையும் மேலும் குறையாமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இருதயத் துடிப்பு சீராக:

இருதய படபடப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவல்; தினமும் பீன்ஸை பயன்படுத்தி வல இதில் காணப்படும் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய படபடப்பை நீக்கி உடலை காக்கும்.

குடல் புற்றை தடுக்க:-

100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 12% காணப்படுகிறது. இந்தச் சத்தானது குடலின் உடபுறச் சுவர்களை காத்து நச்சுப் பொருட்களை வெளியேற்றி குடலை பாதுகாக்கும் தன்மையுடையது. இதை உணவில் அன்றாடம் பயன்படுத்தி வல குடலின் உட்புற சுவர்களில் மாற்றம் நிகழாமல் தடுத்து பெருங்குடல் புற்று வராமல் உடலை பாதுகாக்கும்.

புண்கள் குணமாக:

நீண்ட நாட்களாக ஆறாத புண்களினால் அவஸ்தைபடுபவர்கள். பீன்ஸை சிறு,சிறு துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த தண்ணீரை ஆறவைத்து புண்களின் மீது ஊற்றி கழுவி வர காயங்கள் விரைவில் ஆறும்.

கர்ப்பிணிகளுக்கு:-

கர்ப்பிணிகள் உண்ணும் உணவில் தினமும் பீன்ஸை சேர்த்து வர இதில் காணப்படும் இரும்புச் சத்து, வைட்டமின் பி12 மற்றும் புரதங்கள் போன்றவை கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி, எலும்பு வளர்ச்சியை தூண்டுவதுடன் நரம்பு பாதிப்புகளிலிருந்து குழந்தையை பாதுகாக்கும்.

குழந்தைகளுக்கு:-

 ஞாபக மறதி மற்றும் போதிய அறிவு வளர்ச்சிpயின்மையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு அவர்களின் அன்றாட உணவில் பீன்ஸை ஏதாவது ஒரு வழியில் (பொரியல், சூப், குழம்பு) கொடுத்து வர, இதில் காணப்படும் தாயமின் (விட்டமின் பி1 ) சத்து குழந்தைகளின் ஞாபகமறதியை நீக்கி பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்து அவர்களை சுறுசுறுப்புடன் இயங்கச் செய்யும்.

உடல் எடை குறைய:-

 அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், மதிய வேளைகளில் உணவில் அளவைக் குறைத்து பீன்ஸை பொரியல் செய்து சாப்பிட்டு வர அதிக பசி எடுப்பதை தடுத்து உடல் எடையைக் குறையச் செய்யும். அதே நேரத்தில் உடலுக்கு தேவையான கலோரிகளும் கிடைக்கும்.







No comments:

Post a Comment