Monday, December 15, 2014

உடல் வெப்பத்தைத் தணிக்கும் பச்சை பயறு

உடல் வெப்பத்தைத் தணிக்கும் பச்சை பயறு

நவதானியங்களில் மிகுந்த புரதச்சத்து உள்ள ஒரு தானியம் பச்சை பயறு. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியார் வரை அனைவரும் தம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய எளிய தானிய வகை. நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் உண்பதற்கு ஏற்ற தானியம் பச்சை பயறு.

பச்சை பயறின் தாவரவியல் பெயர் Vigna radiate இது ஆசியா கண்டம் முழுமையும் விளையக்கூடிய அரிசி, கோதுமை போன்ற பயிர் வகையை சேர்ந்தது ஆப்பிரிக்கா வட அமெரிக்கா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இதனை விளைவிக்கின்றன.


சிறு பயறு கபத்தினால் உணடாகும் நோயை குணமாக்கும். பித்தம் அதிகரித்து இருப்பதை குறைக்கும். சீதளத்தை ஏற்படுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும் பச்சை பயறு உண்பதால் தாது விருத்தி உண்டாகும். 

பச்சை பறியை நன்கு ஊறவைத்து வேகவைத்தால் மிகவும் மிருதுவாக இருக்கும். எளிதில் சீரணமாகிவிடும் மற்ற பருப்பு உண்ட பின் உண்டாகும் வயிறு உப்புசம் இந்த பயறு உண்ட பின் வருவதில்லை. இதன் மேல் இருக்கும் பச்சைநிற தோல் பகுதியோடு தான் உண்ண வேண்டும் இதில் உள்ள நார்ச்சத்து நம் குடலுக்கு மிகவும் நல்லது. ஏளிதில் ஜீரணிக்க கூடிய தன்மையை இது கொடுக்கிறது இந்த தோல் நீக்கிய பின் உடைந்த பருப்பாக கிடைக்க கூடியது பாசிப் பருப்பு, இது சாம்பார் கூட்டு, அவியல்,சூப் வகைகளில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஒரு கப் அதாவது 200 கிராம் பச்சை பயறில் 212 கலோரிகள் கிடைக்கிறது.

200 கிராம் பச்சை பயறில் காணப்படும் ஊட்டப் பொருட்கள்:

  • புரதச்சத்து - 14.18 கிராம்
  • கொழுப்புச்சத்து - 0.77 கிராம்
  • மாவுச்சத்து - 36.68 கிராம்
  • நார்ச்சத்து - 15.4 கிராம்
  • இரும்புச்சத்து - 2. 83 மி;;கி
  • தையாமின - 0.331 மிகி
  • போலேட் - 321 மி;கி
  • வைட்டமின் சி - 2.0 மி.கி
  • வைட்டமின் ஈ - 0.30 மி.கி
  • வைட்டமின் பி6 - 0.135 மி.கி
  • வைட்டமின் கே - 5.5 மி.கி
  • கால்சியம் - 55 மி.கி
  • பாஸ்பரஸ் - 200 மி.கி
  • பொட்டாசியம் - 537 மி.கி


புரதச் சத்து:-

கொழுப்பு சத்து குறைவாகவும் அதே நேரத்தில் புரதச் சத்து அதிகமாகவும் பச்சை பயறில் காணப்படுகிறது. ஒரு கப் வேக வைத்த பச்சை பயறில் நமக்கு 14 கிராம் புரதச் சத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு தினமும் உணவில் பச்சை பயறை சேர்த்தால் தேவையற்ற புரதச் சத்து பானங்களை தவிர்க்கலாம்.

நார்ச்சத்து:-

 கரையக் கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து அதிக அளவில் பச்சை பயறில் உள்ளது. இது உடலில சீரணிக்கும் போது மலச்சிக்கல் போக்குகிறது. மேலும் இதில் உள்ள கரையக் கூடிய நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவை இரத்தத்தில் குறைக்கிறது. இதனால் இதய நோய் உள்ளவர்கள் இந்த பருப்பை தாரளமாக உபயோகிக்கலாம். பச்சை பயறில் உள்ள நார்ச்சத்து நாம் குறைவான அளவு சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டது போன்ற நிறைவை தோற்றுவிக்குட். ஆதனால் உடல் பருமன் உள்ளவர்கள் இதனை தாராளமாக உபயோகித்து உடல் எடையை குறைக்கலாம்.

உடல் பருமன் குறைய:-

பச்சை பயறு உடல் எடை குறைக்கும் உணவு திட்டங்களில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. பச்சை பயறு உடல் எடை குறைய நன்கு உதவுகிறது. இதில் உள்ள மிகக் குறைந்த கொழுப்பு அளவே உடல் எடை குறைய காரணமாகிறது. புரதச்சத்து நார்ச்சத்து அதிகம் உள்ள பச்சை பயறு இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்தை கொண்டது.

ஜீரணசக்தி அதிகரிக்க:-

பச்சை பயறில் உள்ள நார்ச்சத்து உணவுப் பொருளை நன்கு ஜீரணிக்கச் செய்கிறது. மேலும் நார்ச்சத்து மிகுதியால் நாம் சாப்பிடும் மாவுப்பொருள் சீராக நிதானமாக இரத்தத்தில் கலக்கிறது அதனால் நீரழிவு நோய் உள்ளவர்க உபயோகித்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றாது. அவர்களுக்கு பச்சை பயறு உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

முளை கட்டிய பச்சை பயறு:-

முளை கட்டிய பச்சை பயறில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. சாதாரண பச்சை பயறை விட் இதில் அதிக அளவு வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ உள்ளது. கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.

பச்சை பயறை சுண்டலாக சாப்பிடும் போது பித்தத்தையும், கபத்தையும் குறைக்கிறது. பத்திய ஆகாரமான கஞ்சியில் இதனை சேர்த்து சாப்பிட நல்ல ஊட்டம் கிடைக்கிறது நோயுற்றவர்களுக்கும், வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் இது சிறந்த உணவு. காய்ச்சல், பேதி, உடல் பலகீனம், வயிறு உப்புசம், மயக்கம், கை, கால் எரிச்சல், தோல் வியாதிகள், நீரிழிவு, இதய நோய் போன்ற அனைத்து வியாதி உள்ளவர்களும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டு இதன் பலனை பெற வேண்டும். 

No comments:

Post a Comment