Thursday, July 17, 2014

ஆரோக்கியமாய் இருக்க இயற்கை உணவு முறைகள்

இயற்கை என்றுமே மனிதனுக்கு நல்லவற்றினை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் நன்கு வாழ. ஆரோக்கியமாய் இருக்க, நீண்ட ஆயுள் பெற இயற்கையோடு, ஒட்டிய பாரம்பரிய வைத்திய முறையும், உணவுப் பழக்கமும் பேருதவி செய்யும். இயற்கை உணவு முறைகள் கொடுக்கும் உடல் நலன்கள்:- 


  •  உடல் சக்தி கூடும். 
  • வீக்கம், வலி என்பவை மிக குறைந்த பாதிப்பினை ஏற்படுத்தும். 
  • நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும்.
  • கண் பார்வை வெகுவாய் பாதுகாக்கப்படும். 
  • குடல் பாதுகாக்கப்படும். ஜீரண சக்தி கூடும். 
  • மூட்டு வலி, நடக்க முடியாமை போன்றை வெகுவாய் கட்டுப்படும். 
  • வீட்டிலேயே எளிதாய் கையாளப்படும் பொருட்களால் செலவு மிச்சப்படும். 
  • பின் விளைவுகள், பக்க விளைவுகள் இல்லாதது. 
  • அதிக சர்க்கரை செயற்கை நிறம், செயற்கை பாதுகாப்பு சேராதது. 
  • aspartame எனப்படும் சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புக்காக சேர்க்கப்படும் செயற்கை இனிப்பு உடலுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 
  • வாங்கப்படும் சிப்ஸ், லிங்கட் போன்றவைகளால் சேர்க்கப்படும் செயற்கை கொழுப்பு உடலின் `கொலஸ்டிரால்' அளவினை வெகுவாய் கூட்டி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது. 
  • மோனோ சோடியம் க்ளுகடேட் (MSG) எனப்படும் செயற்கை பொருள் பல ரெடிமேட் உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. இது தலைவலி, உடல் எடை ஏற்றம், சர்க்கரை நோய் போன்றவற்றினை அளிக்கின்றது. இயற்கையோடு வாழ்வினையும், உணவுப் பழக்கத்தினையும் இணைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment