Thursday, November 21, 2013

தும்மல்,மூக்கடைப்பு,தலைவலி சித்தர் மூலிகை மருத்துவம்

சைனஸ் தொந்தரவில் பல வகை உள்ளது. அந்நோய் மூக்கை மட்டும் தாக்குவதில்லை. தலையில் உள்ள அனைத்து உறுப்புகளையுமே பாதிக்கிறது.  சைனஸ் பிரச்னையில் மூக்கிற்கு அருகே உள்ள காற்றறையான சைனஸ் என்ற இடைவெளியில் நீர் கோர்த்து சளியாக மாறி அடைப்பதால்  வருகிறது. சைனஸ் தொந்தரவின் முக்கிய குறிகுணம் மூக்கடைப்பு ஆகும்.
எப்பொழுது படுத்து எழுந்தாலும் சளி பிடித்து மூக்கில் அடைத்தது போல்  உணர்வு ஆரம்ப கால கட்டத்தில் காணப்படும். சிலருக்கு சிறிது காற்று கூட உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மூக்கடைப்பு காணப்பட்டால் சைனஸ்  முற்றிய நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். சைனஸ் தொந்தரவில் அடுத்த பிரச்னை தலைவலியாகும். முக்கியமாக புருவத்தில்  வலி, நெற்றி பொட்டில் வலி, தலைபாரம் போன்றவை சைனஸில் சளி கோர்த்துள்ளது என்பதன் அறிகுறியாகும்.

குனிந்து நிமிரும் போது நெற்றியில் நீர் ஓடுவது போல தோன்றும். சிலருக்கு புருவத்தில் ஊசி குத்துவது போல வலி, கன்னப்பகுதி கனமாக  தோன்றுவது போல காணப்படும். தாடை  பகுதியில் வலி, வாயை முழுவதுமாக திறக்கும் போது வலி, காதில் இருந்து தாடை வரை வலி  காணப்படுதல் போன்றவை சைனஸின் முக்கிய குணங்களாகும்.

சைனஸின் அடுத்த நிலை தொண்டையை தாக்குவதாகும். மூக்கை உறிஞ்சினால் தொண்டையில் சிறிதளவு மெழுகுபோல சளி வெளியேறும்.  காலையில் எழுந்தவுடன் தொண்டை கரகரப்பு, சளி துப்பினால் சிறிதளவு சளி வெளியேறுதல் போன்றவை காணப்படலாம். பொதுவாக சைனஸ்  தொந்தரவு உள்ளவர்களுக்கு உடல் எப்போதும் சூடாக இருத்தல், உடல்வலி, இரவு தூக்கமின்மை, அடிக்கடி காய்ச்சல் போன்ற தொந்தரவுகள்  நிரந்தரமாக இருக்கும்.

இதற்கு சித்தர் மூலிகை மருத்துவத்தில் தீர்வு உள்ளது. சைனஸில் மூக்கடைப்பு உள்ளவர்களுக்கு மூலிகை சொட்டு மருந்துகள் விட்டு மூக்கின்  வழியாக சளியை வெளியேற்ற முடியும். தொண்டை பாதிப்பு, காதுவலி, காது இரைச்சல் வராமலும், வந்த பின்பும் மூலிகை மருந்துகள் மூலம் சரி  செய்ய முடியும்.,

அடுக்கு தும்மல் மூக்கில் வரும் அடுத்த தொந்தரவு அடுக்கு தும்மல், மூக்கில் நீராக வடிதல் ஆகியனவாகும். மூக்கின் உள்பகுதியில் மேற்பக்கத்தில்  வடிகட்டி போன்ற  அமைப்பு உள்ளது. இது தூசுகளை உள்ளே நுழையாமல் வெளியேற்றி தும்மலை உருவாக்கும். அந்த பகுதியில் வீக்கம் ஏற்பட்டு  அடுக்கு தும்மல் வருவது ரைனைட்டிஸ் என்ற வியாதியாகும். இதில் மூக்கில் தொடர்ந்து தும்மல், மூக்கில் அரிப்பு, பச்சை தண்ணீராக ஒழுகுதல்,  கண்களில் அரிப்பு ஆகியவை இருக்கும்.

காலையில் எழுந்தவுடன் தும்மல், ஒவ்வாத வாசனையால் தும்மல் ஏற்படலாம். நாட்பட்ட நிலையில் மூச்சிரைப்பாக மாறிவிடும்.  ரைனைட்டிஸ்  தும்மலாக வந்து ஆஸ்துமாவாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. சித்தர் மூலிகை மருத்துவத்தில் தும்மலை கட்டுப்படுத்தி அலர்ஜியை  குறைத்துவிடலாம். நிச்சயமாக அது ஆஸ்துமாவாக மாறாமல் தடுத்து விடலாம்.  எந்த பக்க விளையும் இல்லாமல் தொடர் சிகிச்சை மூலம் அடுக்கு  தும்மலை கட்டுப்படுத்தி முழுமையான குணமளிக்க முடியும். ஆஸ்துமாவையும் குணப்படுத்த முடியும்.

டென்ஷன் தலைவலி : சிலருக்கு டென்ஷன் அதிகமாவதால் மன அழுத்தம் உண்டாக்கி தலைவலி வருகிறது. இது நெற்றிப்பொட்டில் வலிப்பது போல  காணப்படும்.  தூக்கமின்மை காரணமாகவும் தலைவலி வரும். மைக்ரேன் என்ற ஒற்றைத்தலைவலி: மைக்ரேன் தலைவலி குணப்படுத்த முடியாத  வியாதி என்று கூறப்படுகிறது. தலையில் ஒருபக்கமாக வலி, நெற்றி பகுதியிலும் வலி வருகிறது.

இது கடுமையான வலியாக ஆரம்பித்து வாந்தியை உண்டாக்கும். திடீரென்று வலி வந்து தலையே வெடித்து விடுவது போன்ற வலி, உணவு  உட்கொள்ள முடியாமல், எந்த வேலையும் செய்ய முடியாமல் இருக்கும்.பெண்களுக்கு ஏற்படும் தலைவலி சில பெண்களுக்கு மாதவிடாயின் போது  தலைவலி ஏற்படும். பசியோடு இருந்தாலும் தலைவலி வரும். இதற்கு காரணம் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதாகும். மேலும் இரும்பு  சத்து குறைவதாலும் சிலருக்கு தலைவலி வரும். இதற்கு மூலிகை மருத்துவத்தில் இரும்பு சத்து மருந்துகளோடு தலைவலியை குறைக்கும்  மருந்துகளும் கலந்து கொடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment