Monday, November 18, 2013

அஞ்சறைப் பெட்டி மருத்துவம்: நறுமண மூலிகைகளின் அரசன் மிளகு

வருமுன் காப்போம் என்பது இன்றைய மருத்துவத்தின் குறிக்கோள்.இயந்திர வேகத்தில் இயங்கும் மனித வாழ்க்கையில், அன்றாட வாழ்வில் உணவுக்கு உள்ள முக்கியத்துவத்தையே மறந்து விடுகிறோம். நமது உடலை நோய் வருவதற்கு முன்பே காப்பது நம்முடைய உணவு முறைதான். முறையான சரிவிகித உணவு நம் உடலின் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புத் திறனையும் மேம்படுத்துகிறது.



உணவே சில வேளைகளில் மருந்துப் பொருளாகவும் உபயோகமாகிறது. அப்படிப் பட்ட பொருட்கள் தான் நம்முடைய அஞ்சறைப் பெட்டி பொருட்கள். அதில் மிளகு மிகுந்த விசேஷம் கொண்டது. புத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். ஏன்கிற பழமொழியை நம் முன்னோர்கள் எதற்காக கூறினார்கள் என்றால் நச்சுத்தன்மையை போக்கும் ஆற்றல் மிளகுக்கு உண்டு என்பதால் தான்.

மிளகு ஒரு சிறந்த நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட பொருள். மிளகு காரத்தன்மை கொண்டது மிளகுக்கு என்று தனி மணம் உண்டு. மிளகு உணவை செரிக்க வைக்க பெருமளவில் உதவுகிறது. நம் முன்னோர்களின் காலம் தொட்டு மிளகை நாம் பயன்படு;த்தி வருகிறோம். அதனுடைய மருத்துவ குணங்கள் அளவிட முடியாதவை.

மிளகின் மருத்துவ குணங்கள்: 

மிளகு சீரண சக்தியை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது.

வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும் பண்பு மிளகுக்கு உண்டு.

ஊடலின் வெப்பத்தை சீர்படுத்தும் தன்மை மிளகுக்கு உண்டு.

மிளகுக்கு உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் பண்பு உண்டு

சளியை வெளியேற்றும் தன்மை மிளகுக்கு உண்டு

மிளகு உணவில் நல்ல மணத்தைக் கொடுக்கும்

மிளகு தசை வலி, அடிப்பட்ட வலி போன்றவற்றை போக்கம்

பசியைத் தூண்டி விடும் தன்மை மிளகுக்கு உண்டு

மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம்,வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. மிளகு ஆன்டி –ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

தினமும் இரண்டு மிளகு வீதம் ஏதாவது ஒரு வகையில் உண்டு வந்தால் மேற்சொன்ன அத்தனை பலன்களையும் நாம் பெறலாம்.



உணவின் சுவையை கூட்ட:



நாம் உண்ணும் உணவில் சுவையையும் மணத்தையும் ஒரு சேர சேர்ப்பதில் மிளகைத் தவிர வேறு பொருட்களை சொல்ல முடியாது மிளகு குழம்பு மிளகு ரசம் என்ற பலப்பல விதங்களில் நம் உணவின் சுவையை மிளகு கொண்டு அதிகப்படுத்திக் கொள்ளலாம்.



சீரணசக்தி மேம்பட:



மிளகில் உள்ள  Piperine  என்ற வேதிப் பொருள் பசியைத் தூண்டி விடுகிறது. இந்த வேதிப்பொருள் உணவு மண்டலத்தில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. ஊமிழ்நீர் சுரப்பையும் அதிகப்படுத்துகிறது. இதனால் நாம் சாப்பிடும் பொருள் எளிதில் சீரணிக்கப்படுகிறது.


நெஞ்சு கபம் நீங்க:


சுக்கு மல்லி காபி என்ற அனைவரும் அறிந்திருப்பீர்கள். சுக்கு, மல்லி நான்கு (அ) ஐந்து இடித்து பொடித்து நீரில் கொதிக்க வைத்து பனை வெல்லம் கலந்து பால் இல்லாமல் தினமுத் மாலை வேளையில் குடிக்கலாம். இதனால் நெஞ்சில் உண்டாகக்கூடிய சளி விரைவில் கரையும். சுளியை சேர விடாது. சுளி உருவாவதைத் தடுக்கும் அரு மருந்து இது.


சளித் தொல்லை போக்க:


இரண்டு மிளகோடு இரண்டு ஆடாதோடா இலை மற்றம் சுக்கு, திப்பிலி சேர்த்து கஷாயம் போட்டு குடித்தால் தீராத சளித்தொல்லை தீரும்.


மூல நோய்கள் விலக:


நூட்பட்ட மலச்சிக்கல் மற்றும் மூல நோய்கள் குணமாக ஆறு (அ) ஏழு மிளகோடு ஐந்து கிராம் பெருஞ்சீரகம் சேர்த்து கஷாயம் இட்டு குடிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு வாரம் அருந்தினால் மலச்சிக்கல் தீரும். மூல நோய் குணமாகும்.


மூல நோய்கள் விலக:


அலர்ஜி (அ) ஒவ்வாமை உடலில் இருந்து மறைய மிளகு ஒரு அருமையான மருந்தாகும். மிளகோடு சிறிது துளசியை சேர்த்து உண்டால் போதுமானது. ஊடலில் உள்ள நச்சுத்தன்மை அகன்று ஒவ்வாமை நோய் ஓடிப்போகும்.


நம் முன்னோர் சொற்படி நாம் மிளகை உணவில் சேர்த்து நல்ல பல பயன்களை பெறுவோம்.

No comments:

Post a Comment