Showing posts with label புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது மாம்பழம். Show all posts
Showing posts with label புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது மாம்பழம். Show all posts

Thursday, July 10, 2014

புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது மாம்பழம்

முக்கனிகளின் முதல் கனியான மாம்பழத்தின் பெருமை அபாரம். மாம்பழத்தின தாயகம் நமது நமது நாடு தான் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். இன்று பல நாடுகளில் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. எனினும் நமது நாட்டு பழங்களுக்குத்தான் உலகமெங்கும் வரவேற்பு அமோகமாய் இருக்கிறது. இருப்பினும்சீசன் பழமான இது மார்ச் முதல் ஜீலை வரை தான் கிடைக்கின்றது. சாதாரணமாக ருமானி,பெங்களுரா, பச்சை, பங்கனபல்லி, நீலம், பீத்தர், மல்கோவா என்று இவ்வகை பழங்களே அதிகமாக மார்க்கெட்டுக்கு வருகின்றன.


மாம்பழங்களில் சிலவகை அதிக இனிப்பாகவும் சில வகை இனிப்பும் புளிப்பும் கலந்து ருசியோடும், சிலவகை வெறும் புளிப்பாகவும் இருக்கும்.