சீரகம் மருத்துவம் :
சீர் + அகம் ஸ்ரீ சீரகம். உள் உறுப்புகளின் சீரற்ற தன்மையை சரி செய்வதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது. சீரகம் நம் சமையலில் மணம் சேர்க்கும் பொருளாக பண்டைக் காலத்திலிருந்து இருந்து வருகிறது. அறிவியல் அறிஞர்கள் சீரகத்தை ஆய்வு செய்ததில் பலன்தரத்தக்க செய்திகளை கூறியுள்ளனர்.![]() |
cumin |
சீரகம் கணையத்தை தூண்டி சீரணத்திற்கு தேவையான நொதிகளை சுரக்கச் செய்கிறது. இந்த நொதிகள் சீரண உறுப்புகளை தூண்டி அதன் வேலையை செய்ய வைக்கிறது. இதனால் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு, வயிறு உப்பிசம், தலைச்சுற்றல், மயக்கம்,வாந்தி போன்றவை வர விடாமல் தடுத்து விடுகிறது.
பசியைத் தூண்டிவிடக்கூடிய சக்தியை சீரகம் இருப்பதால் நிறைய ஆயுர்வேத சித்த மருந்துகளில் மிக முக்கிய இடம் பெறுகிறது.
நரம்பு பலத்திற்கும், உடல் அசதி தீருவதற்கும் சீரகம் பெரிதும் உதவுகிறது. உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியடைய வைக்கும் தன்மை சீரகத்திற்கு உண்டு.