.jpg)
நாம் ஒவ்வொருவரும் நம் உடல் நலனையும் மன நலனையும் பேணிப் பாதுகாக்க பல்வேறு செயல்களையும். உணவு முறைகளையும் மருத்துவ முறைகளையும் பேணி வருகிறோம். அவ்வகையல் நம் உடலுக்கும், மனதுக்கும் ஆழ்ந்த தொடர்பு உண்டு. தெளிவான மனம் வேண்டுமென்றால் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் கூறியுள்ளார். நம் உடல் நலனை நாமே காத்துக் கொள்ள சித்தர்கள் கூறும் உளிய வழி பயிற்சிதான் யோகாசனம் ஆகும்.
அதோமுக சுவானாசனம்
அதோமுகம் என்றால் கீழ்நோக்கும் முகம் என்று பொருள். சுவானம் என்றால் நாய். இந்த ஆசனம் நாய் சோம்பலை முறிப்பதற்காக முதுமை நன்றாக நீட்டுவது போல் இருப்பதால் இதற்கு அதோமுக சுவானாசனம் என்று பெயர்.